preloader

About Us

service service
service service

தமிழ் சித்தர்களில் முதன்மையானவர்

அகத்தியர்

அகத்தியர் (Agathiyar) என்பவர் தமிழி என்ற தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்குப் பயணப்பட்டு அதைச் சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினைத் தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழைச் சிவபெருமானிடமிருந்து கற்று உணர்ந்து மற்றவருக்கும் போதித்த ஆசானும் ஆவார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழி என்ற தமிழ் மொழிக்கான இலக்கணம் முதலான நூல்களை இயம்பியவர்.

இப்பேற்பட்ட மகான் அகத்தியருக்கு தமிழ்நாட்டில் தமிழக அரசால் ஒரு சிலை அமைக்கப்பட வேண்டும், அந்த சிலை அமைக்குப் பெறுகின்ற இடம் உலக நாடுகளில் இருந்து வரக்கூடிய சுற்றுலா வாசிகளுக்கு சுற்றுலா தளமாக விளங்க வேண்டும், அந்த சிலை அமைக்கப்படுகின்ற இடத்தில் அகத்தியரால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு ஒரு நூலகத்தை அமைத்து அகத்தியர் அவர்களால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் இருக்கக்கூடிய தட்டெழுத்து தமிழை இன்றைய நடைமுறையில் இருக்கக்கூடிய தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து புத்தகங்களாக அங்கு இடம் பெற செய்ய வேண்டும், அது மட்டும் அல்லாமல் அங்கு ஒரு பெரிய எல்சிடி மானிட்டர் அமைத்து அதில் அகஸ்தியர் அவர்கள் இயற்றிய நூல்களில் இருக்கக்கூடிய கருத்துக்களை, முறைகளை, தகவல்களை, வீடியோவாக வெளியிட வேண்டும் இதனால் உலகம் முழுவதும் அகத்தியர் யார் என்பதை தெரியவரும் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அகத்தியர் அவர்களே பிள்ளையார் சுழி என்பதை உணர்த்துவதன் காரணத்தினால் இதை செய்ய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அமைப்பை பலப்படுத்த வேண்டும், இது ஒன்றே நோக்கமாக கொண்டு நாம் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

அகத்தியர் ஆன்மீக சங்கம் என்பது அகத்திரியின் கொள்கைகளை சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டு அந்த சித்தாந்தத்தை தன் வாழ்நாள் முழுவதும் தானும் வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களை வாழ வைப்பது தான் நம் வாழ்நாள் குறிக்கோள்
அப்படி அந்த அகத்தீருடைய சித்தாந்தம் தான் என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்

service

சித்தாந்தம்-1
இல்லற தர்மம்!
கட்டிய மனைவியை
கடைசி வரை
கண் கலங்காமல்
காப்பவன்
தவம் செய்ய தேவை இல்லை
இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது
அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்
96 தத்துவங்கள்
முடிவு பெறுவது
இருபத்தி ஒரு வயதிலே
அதன் பிறகே
அவனது
சொந்த
ஆன்ம கர்மா
செயலில் இறங்கும்.
சிவமாக இருந்தால் மட்டும்
சிரசு ஏற முடியாது
சக்தியோடு
துணை சேர வேண்டும்.
சிரசு ஏற பல வழி
தியானம் மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
யோக மூலம்
தீட்சை மூலம்
சிவசக்தி மூலம்
இன்னும்
எத்தனையோ மூலம்
வழி உள்ளது
சிரசு ஏற.
ஆனால்
சிறந்த மூலம்
இல்லற தர்மம்.
சிவம் பிறக்கையிலே
அவனுக்கு முன்பே
சக்தி பிறந்து விடுகிறது
சக்தி மாறி
சிவம் சேர்ந்தாலே
பிறவியே சிக்கலே
மனம் பொறுத்தம்
பூமியிலே ஜெயிப்பது இல்லை
ஆன்ம பொறுத்தமே
பிறவியை ஜெயிக்கும்.
அந்த சக்தி யோடு
சிவம் சேரும் போதே
சர்வமும் சாந்தி ஆகும்
சிவ சக்தி இடையே
ஊடலும் கூடலூம்
உற்சாகம் தானே......!!!
ஆனால்
சக்தியின் கண்ணீருக்கு
சிவம் காரணமானால்
அதை விட
கொடிய கர்மா
உலகில் இல்லை
ஒருவன்
வாழ்வை ஜெயிக்க
ஆயிரம் வழி
தர்மத்தில் உள்ளது உண்மையே
ஆனால்
உறவுகளை கொண்டே
உலகை வெல்வதும்
பிறவி பிணி அறுக்க வும்
ஒரு வழி உள்ளது
உலகம் அறியாதது.
சொந்தம் என்பது
பழைய பாக்கி என
அறிந்தவனுக்கு
சொந்தம் சுமை இல்லை.
நட்பு என்பது
பழைய பகை என்பதை
பண்போடு அறிந்தவணுக்கு
பதற்றம் இல்லை
எதிரி என்பவன்
தனது கர்மாவின்
தார்மீக கணக்கே என
தன்மை யோடு உணர்ந்தவனுக்கு
எதிரி
எதிரி இல்லையே...
உனது எதிரியும் நீயே!
உனது செயலே
கர்மா ஆகி
அந்த கர்மாவே
நீ எதிரி என நினைக்கும்
ஒரு உயிருள்ள சடலத்தை
உனக்கு எதிராக
பயன்படுத்துகிறது என நீ
உணரும் போது...
உன் எதிரி முகத்தில
உனது கர்மா
உனது கண்களுக்கு தெரிய வந்தால்...
எதிரி
உனக்கு எதிரே இருந்தாலும்
கலக்கம் தேவை படுவதில்லை!
உன்னை
உடனிருந்தே கொல்லும்
உறவும்
உன்னோடு பிறக்கும்
உனது
பழைய கணக்கிலே!
பழைய கணக்கு புரிந்தால்
பந்த பாசம்
சகோதரத்துவம் மீது
பற்று அற்ற பற்று வைத்து
பிறவி கடமை வெல்லலாம்.
கர்மாவின் கணக்கு புரிந்தால்
உனது பக்கத்தில்
சரி பாதி அமரும்
மனைவி
யார் என்றும் புரியும்.
தாய் தந்தையை
அன்போடு
பூஜிப்பவன்
தந்தை வழி
தாய் வழி
ஏழு ஜென்ம கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.
உறவுகளுக்கு
அவர்கள் தரும் இன்னல்கள்
பொறுத்து
உபகாரமாக உதவி வந்தால்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
உனது
ஏழு ஜென்ம
சமூதாய கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.
கோயில் போனாலோ
மகா குளத்தில்
குளித்தாலோ
ஒன்னும் மாறாது!
சிறு இன்பம் மட்டும்
சிறிது காலம் கிடைக்கும்
அவ்வளவே.
ஆனால், ஒரே ஒரு உறவை நீ பூஜித்தால்
பிறவி பிணி
மொத்தமாக தீரும்
அது மனைவியே.
மனைவியை
மகிழ்ச்சியாக வைப்பது
உலகிலேயே
சிரமம் மட்டும் அல்ல,
அது தான் உலகிலேயே சிறந்த
தவம்!?
தவம் என்பது
சாமாண்யன்களுக்கு சிரமமே!!
கட்டிய மனைவியை யும் உன் மூலம்
அவள் பெற்ற பிள்ளைகளையும்
உளமாற நேசித்து
உன்னதமாக
உனது வாழ்வை
ஆனந்தமாக நீ
அர்ப்பணித்தால்
அதுவே உலகின் சிறந்த தர்மம்
சிறந்த தவம்!
தாய் தந்தையை
வணங்கினால்
ராமேஸ்வரம் போக தேவை இல்லை
பித்ரு தோஷம் நீங்க.
உறவுகளை மதித்தால்
கிரக தோஷம் நீங்க
திருவண்ணாமலை
இடைக்காடரை
தேட தேவை இல்லை
நவ கிரகமும்
சுற்ற தேவை இல்லை.
மனைவியை
பெற்ற பிள்ளையை நேசித்தால்,
அவர்களை
ஆனந்தமாக வைத்தால்,
கர்ம விமோஜனம் தேட அகத்தீசனை தேடி பாபநாசம்
போக தேவை இல்லை.
இதற்கு தான்
இல்லற வாழ்க்கை அமைத்தான்
நமது முப்பாட்டன்
ஆதி யோக வம்சம்.
மனைவி அழும் வீட
ே நரகம்.
மனைவி சிரிக்கும் வீடே பிரபஞ்ச சொர்க்கம்.
சக்தி உணர்ந்தாலே மட்டுமே
சிவம் ஜோதி ஆக ஜொலிக்கும்...